பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 19, 2013

கொலைகார இலங்கை, உதவும் இந்தியா - பத்ரி சேஷாத்ரி

இன்று தி ஹிந்து பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியான படங்கள் வாசகர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கும்.

முதல் பக்கத்தை அடுத்து, நடுப்பக்கக் கட்டுரை. எழுதியவர் கால்லும் மெக்ரே. இலங்கையில் கொலைக்களம் என்ற படத்தை பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சிக்காக இயக்கியவர். ஏற்கெனவே வெளியான இரு பகுதி ஆவணப்படத்தின் மூன்றாவது பகுதியில் என்ன வரப்போகிறது என்பதை எடுத்துச் சொல்லும் கட்டுரை இது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. அப்போது அந்தச் சிறுவன் இறந்துகிடந்த படத்தை ஆராய்ந்த நிபுணர்கள், வெகு அருகில், மூன்றடி தூரத்தில், கண்கள் ஏதும் கட்டப்படாத நிலையில், தான் சுடப்படப் போகிறோம் என்பது தெரிந்த நிலையில், அச்சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான். அச்சிறுவன் சற்றே கையை நீட்டி முன்னே சென்றிருந்தால் அந்தத் துப்பாக்கியைத் தொட்டிருக்க முடியும் என்கிறார் ஒரு நிபுணர்.

இப்போது தி ஹிந்து கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் படத்தில் சுடப்படுவதற்குச் சற்றுமுன் அச்சிறுவன் சட்டை ஏதும் இன்றி, மணல் சாக்குகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதற்குப்பின் உட்கார்ந்திருக்கிறான். அந்தப் படங்களையும் பின்னர் இறந்துகிடக்கும் படங்களையும் வீடியோவையும் ஆராயும்போது இதுதான் தெரிய வருகிறது. அந்தச் சிறுவனுக்கு கையில் ஏதோ பிஸ்கட் போல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாப்பிட்டு, நீர் குடித்து முடித்ததும், அவன் கூட வந்திருக்கும் ஐந்து மெய்க்காப்பாளர்களையும் அச்சிறுவன் பார்க்கும்போதே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உடனே அச்சிறுவனுக்கு மிக அருகில் வந்து அவனையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

சரணடைந்தவர்களைக் கொல்லக்கூடாது, சிறுவர்களைக் கொல்லக்கூடாது என்ற எந்த விதிமுறைகளையும் இலங்கை அரசு மதித்ததாகத் தெரியவில்லை. இந்த அரசும் இதன் தலைமையில் இருக்கும் மகிந்த ராஜபக்‌ஷேவும் மிகக் கொடுமையான, சர்வதேசச் சட்டத்துக்குப் புறம்பான, அநீதியான ஒரு செயலைச் செய்திருக்கிறார்கள். இச்செயல்கள் தொடர்பான சாட்சியங்கள் வலுத்துக்கொண்டே போகிறது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு குற்றவாளியை இந்தியா பாதுகாக்கிறது. இல்லாவிட்டால் சீனாவுடன் அவர்கள் உறவு வைத்துக்கொள்வார்கள் என்ற சொத்தை வாதத்தை முன்வைத்து தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு ஆதரவான, மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துவருகிறது. ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்கூட இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதாகச் சொல்லிக்கொண்டே இலங்கையைக் காப்பதான ஒரு நிலையையே இந்தியா எடுத்தது.

இந்தியாவின் மனித உரிமைச் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதே தனியாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் அதைத் தாண்டி இலங்கையில் கொலைச் செயல்களுக்குத் தூபம் போட்டவர்கள், அவற்றை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்தவர்கள், பிற நாடுகள் குற்றம் சாட்டும்போது இலங்கையில் நடந்த கொலைச் செயல்களுக்கு ஆதரவாக வாதாடி, ராஜபக்‌ஷேயைக் காத்தவர்கள் என்ற அவப்பழி இந்தியாமீது சூழ்ந்துள்ளது. இந்தக் கறையிலிருந்து விடுபட ஒரே ஒரு வழிதான் உள்ளது. இலங்கைமீது கடுமையான அழுத்தத்தைச் சுமத்தி, இலங்கையின் மகிந்த ராஜபக்‌ஷே போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப்படுமாறு செய்ய இந்தியா முனைப்புடன் செயல்படவேண்டும். இது எளிதான ஒரு செயல் அல்ல. உலகின் பெரும்பாலான நாடுகள் குற்ற நெஞ்சுடன் இருப்பவையே. அவர்கள் கைகள் ரத்தக் கறை படிந்தவையே. ஆனாலும் இலங்கையில் கொடூரமான நிகழ்வுகளை மனத்தில் கொண்டு பிற குற்றவாளிகள் ஒன்றுசேர்ந்து தம் பாவங்களைக் கொஞ்சமாவது குறைக்க முடிவெடுக்கவேண்டும்.

ராஜபக்‌ஷேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்வரை இலங்கையை ராஜரீக முறையில் பிற நாடுகள் விலக்கிவைக்கவேண்டும். ராஜபக்‌ஷே தன் நாட்டில் கிட்டத்தட்ட எமெர்ஜென்சி அதிகாரங்களுடன் அனைத்து அமைப்புகளையும் நொறுக்கித் தன் வசம் கொண்டுவந்துவிட்டார். அந்த நாட்டில் இனி யாருக்கும் நியாயம் கிடைக்கப்போவதில்லை. ஆட்சி மாற்றம் வந்தாலொழிய.

-  பத்ரி சேஷாத்ரி

அண்டை நாடு இந்தியாவிற்கு பதில் பாகிஸ்தானாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கலாம்.

26 Comments:

R Sathyamurthy said...

This is a barbaric act. However, this will never be even highlighted in the so called north based English media. They are too busy to talk about these things. If Mamta slaps someone, that will be better headline news for debate by them than news like these, becasue that comes from South India.

This bias was visible even in the recent Vinodhini acid attack episode. While the New Delhi rape issue was hogging the limelight for days together, there was not even a passing mention about Vinodhini acid attack-murder case, when this atrocity against a young woman was as condemnable as the rape case.

The so called national media must feel ashamed for their almost racist attitude.

jaisankar jaganathan said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Jaishanker Jaganathan, you are targeting Pakistanis or Muslims. Your comment is very immature.

Anonymous said...

Dear Idly Vadai, Thank you for removing that offensive comment.

But, you could have not published it at all.

ஸ்ரீராம். said...

மனம் பதறும் இந்தச் செயலைச் செய்த அந்த அரக்கர்களின் மனதில் அதற்குப் பிறகாவது கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருந்திருக்குமா? இவர்களுக்கு எல்லாம் யார் தண்டனை கொடுப்பது? கடவுள் தண்டனை கொடுப்பார் என்று நம் இயலாமையை வெளிக்காட்டிக் கை கழுவி விடுகிறோம். அப்பாவின் மீது இருக்கும் கோபத்தை அவர்களின் குழந்தைகள் மீது காட்டும் இத்தகையோரை என்னவென்று சொல்ல?

சத்தியமூர்த்தி சரியாகச் சொல்லியிருக்கிறார்.

IdlyVadai said...

Dear Anony,

sometimes it is very difficult to read all the comments and then publish it. I believe that IV readers are more matured :-)

k.rahman said...

i felt so bad when i first saw this photograph. i seriously wish that i dont see this again. it just spoils my day. how somebody can kill a kid all of 13 yrs in cold blood. my heart goes out to him.

we shouldnt have allowed this murderer rajapakse to set foot on tirupati. atleast andhra govt should have shown some spine and sympathy to tamil's feelings.
i pray and wish that this criminal and whoever did this atrocious act get it back in their life time.

india is just hiding behind the excuse that srilanka will team up with china if we are going to go against them. fact is no matter what india does or doesn't china is going to be sri lanka's partner. any nation with self respect would not let a matchbox country like this to blackmail them.

what is most disturbing is the feeling of helplessness that i can do nothing about it other than writing a comment and shedding some tears.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

எல்லோரும் கைவிட்ட இலங்கை தமிழனைப் பற்றி நாம் பேசி என்ன பயன்?. இதே தி ஹிந்து நாளிதழ், போர் நடைபெறும் போது மகித ராஜபட்சேவின் ஆதரவு பேட்டியை வெளியிட்டது. ஹிந்து ராம்தான் பேட்டியும் போட்டவும் எடுத்திருந்தார்.

போர் குற்றம் அல்லது அத்துமீறல் நடைபெற்றபோது நாம் (தமிழகத்தில்) எல்லோரும் சுய உணர்வோடும் உயிரோடும்தான் இருந்தோம். அந்த இயலாமை நாம் சாகும் வரை, நம்மை உறுத்திக் கொண்டுதான் இருக்கும்.

பட்டிகாட்டான் Jey said...

Put aside pakshe... after all he is an enemy we can settle our score oneday or other, as we like...

The cong.& dmk's irresponsible, inhuman acts at that time is unforgivable. My(many other's) dislike turned became hatred towards selfish karuna only at this point.

What all this bloody truths explored to pubiccnow were well known to these 'heartless selfish
inhuman' much earlier...

The HINDU, the most biased towards SL govt. during war time and who betrayed tamils by supressing brutal killings of SLA, now releasing thes pic. to claim neutrality.... these are very hard either to digest or to forget/forgive...

India should come up against SL put aside china/pak card....

பட்டிகாட்டான் Jey said...

Put aside pakshe... after all he is an enemy we can settle our score oneday or other, as we like...

The cong.& dmk's irresponsible, inhuman acts at that time is unforgivable. My(many other's) dislike turned became hatred towards selfish karuna only at this point.

What all this bloody truths explored to pubiccnow were well known to these 'heartless selfish
inhuman' much earlier...

The HINDU, the most biased towards SL govt. during war time and who betrayed tamils by supressing brutal killings of SLA, now releasing thes pic. to claim neutrality.... these are very hard either to digest or to forget/forgive...

India should come up against SL put aside china/pak card....

பட்டிகாட்டான் Jey said...

Put aside pakshe... after all he is an enemy we can settle our score oneday or other, as we like...

The cong.& dmk's irresponsible, inhuman acts at that time is unforgivable. My(many other's) dislike turned became hatred towards selfish karuna only at this point.

What all this bloody truths explored to pubiccnow were well known to these 'heartless selfish
inhuman' much earlier...

The HINDU, the most biased towards SL govt. during war time and who betrayed tamils by supressing brutal killings of SLA, now releasing thes pic. to claim neutrality.... these are very hard either to digest or to forget/forgive...

India should come up against SL put aside china/pak card....

dr_senthil said...

நமக்குதான் தெரியவில்லை.. கடவுளுக்காவது தெரியுமா தன்னை கும்பிடவந்தவனை பற்றி முழுமையாக ?

Ravi said...

Today morning when I saw the pic on the front page, I thought how cute\bubbly the boy is, then when I read the caption I realized what will be in the centre-page.

The entire Tamil Nadu politico has to come in one stage to attack SL.

@பட்டிகாட்டான் Jey
The Hindu newspaper was biased at the time of war, but remember now there is a significant change in the editorial team.

Anonymous said...

I WAS IN SRILANKA AND THE LANKANS WILL BE NEVER GRATEFUL TO INDIA. IN FACT THE BUDDIST MONKS HATE INDIA.
WHY TALK OF RAJAPAKSE ? WILL DMK MPS AND MINISTERS RESIGN NOW. THEY WILLNOT. SASTRI SIGNED A PACT FOR BRINGING TAMILS BACK. WILL HE SIGN A PACT FOR BRINGING GUJARATHIS FROM AFRICA OR SIKHS FROM CANADA.
EVERYONE KNOWS WE DONT HAVE UNITY AND DO NOT RESPECT US.
OUR ENEMIES ARE WITHIN. ANDHRITES, KANNADIGAS, KERALITES, DONOT DIVIDE THEMSELVES AS ARYANS AND DRAVIDIANS WHICH ITSELF IS A MYTH.
INNOCENT TAMILS INCLUDING PRAABAKARAN'S SON REWR KILLED BY THE INACTION OF CONGRESS AND DMK NOT BY LANKANS.
THE NEWS OF PRABAKARANS DEATH ITSELF WAS DELAED AT THE REQUEST OF CONGRESS. ONE BY ONE TRUTHS WILL COME OUT.
VASAN BELONGS TO CAUVERY DELTA. HE HAS NOT SPOKEN A SINGLE WORD FOR GAZETTING THE CAUVERY AWARD WHICH IS A SIMPLE THING.
BUT AGAIN WE WILL VOTE FOR THEM.
THE CENRAL GOVT. IS TEASING THE KARNATAKA GOVT. SO MUSH BUT WILLL NOT DO ANYTHING RE:CAUVERY
NOBODY TAKES US SERIOUSLY SINMCE FOR THE SAKE OF A MINISTERS POST OR MP SEAT OR CBI CASE ALL OUR LEADERS WILL SACRIFICE EVERYTHING INCLUDING OUR TAMILS INTERESTS.
ALL OTHEER STATE MPS WILL BE TOGETHER IN PARLIAMENT HALL, CANTEEN ETC. IRRESPECTIVE OF PARTY LOYALTY. TAMIL MPS WILL NOT EVEN GREET OTHER PARTY FELLOW TAMIL MPS FEARING THEIR LEADERS. CONGRESWS MPS ARE WORSE. THEY WILL DISPLAY GROUP LOYALTY ALSO. YOU CAN NEVER SEE OUR MPS TOGRTHER. THEN HOW PEOPLE WILL RESPECT US
OUR ENEMIES ARE OURSELVES.
LET US ALL UNITE TO SAVE OURSELES AND THEN LANKAN TAMILS.

s suresh said...

கொடூரமான கொலை புரிந்த இலங்கை ராஜ பக்சேவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழர்களும் இந்தியர்களும் குரல் கொடுக்க வேண்டும்! அப்போதுதான் தொடை நடுங்கி காங்கிரஸ் அரசு சற்று செவி சாய்க்கும்!

R. J. said...

நெஞ்சு பொறுக்குதில்லையே! இப்படியும் இரக்கமற்ற பாவிகள் இருக்கிறார்களா? இதை பார்த்தபின்னும் இரங்காத / நடவடிக்கை எடுக்காத அரசு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? - ஜெ .

keyven said...

ராஜபக்சே கும்பிட்ட அந்த வெங்கடாஜலபதி இருக்குறது உண்மையின்னா ராஜபக்சேவுக்கு நல்ல சாவே வரக்கூடாது .

keyven said...

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் புகைப்படத்தைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சியில் உறைந்து போனார் என்று கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இடி அமீன் கூட இந்தப் படத்தைப் பார்த்தால் அதிர்ச்சி அடைவான். அப்படி ஒரு கொடூர முடிவை சந்தித்துள்ளான் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன். சிங்கள ராணுவத்தால் பிடிக்கப்பட்ட அவனை எங்கோ ஒரு இடத்தில் உட்கார வைத்து, சாப்பிட பிஸ்கட் கொடுத்து, பின்னர் வெற்று மார்பில் மிக நெருக்கமாக கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்கள இன வெறியர்கள். உலகமே பதை பதைத்துப் போயுள்ள இந்தப் படங்களை லண்டனின் சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கொடூரக் கொலைக்கு தமிழக அரசியல் தலைவர்கள், உலக மனித ஆர்வலர்கள் கடும் கண்டனமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இந்தக் கொடூரப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து அவரது மகனும், கட்சி பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறுகையில், படத்தைப் பார்த்து தலைவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். பெரும் துயரத்தில் மூழ்கிப் போனார். அப்செட் ஆகி விட்டார். ஈழத் தமிழர்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறை அவரது சோகத்தின் மூலம் வெளிப்பட்டது என்றார் ஸ்டாலின்.

Anonymous said...

The photo is shocking but people must accept the fact that this event is not unique and has happened for ages.

Over the centuries, many people including innocent women and children have been tortured, raped and killed in horrific ways. Yet people selectively ignore and even support perpetrators in the name of their religion, ideology and language politics.

Maniacs like Stalin and Tipu are heroes even though they tortured and killed countless people. Why do people name their children after them ?.

All must speak against crimes against humanity irrespective of the religious/political identity of the perpetrator or victim. Stalin, Pol Pot, Mao, Prabhakaran, Jihadis, Crusaders, Rajapakshe are all villains.

-Rudramurthy

Harris David said...

Another great article from Mr.Badri Seshadri.

hats off to you

k.rahman said...

IV / Badri,
Below is the comment I posted in “The Hindu” so called India’s National Newspaper. The cowards as expected didn’t post it. It is a irony that these stupids are talking about freedom of expression.

“my heart goes out to this kid. what is his mistake? being the son of one of the most dreaded terrorist? is it right if somebody kills rajapakse's children because he is a criminal. my blood boils when i think this mass murderer was allowed in tirupati to worship. shame on him and on the indian govt for showing no spine even after the war.

Hindu,
What is it that you have done when the war was taking place. over the past 30 years all that you have done is to support the srilankan govt in their war against ltte. you have never taken cognizance of the fact that it is the srilankan govt which has started the tirade against the tamils in the north. they were never given equal rights and were always treated as second class citizens.

Hindu,
Please please atleast now start to think from the side of the oppressed people and do whatever you can to bring this criminal to justice. I sincerely wish and pray truth, fairness and justice prevails in the end.
RIP BALACHANDRAN”

dr_senthil said...

அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அதன் பாதுகாப்பு குறித்த கவலை கூட இந்தியாவிற்கு இல்லையே.. புலிகளை ஒழிக்க உதவி செய்தும் இலங்கை சீனாவின் ஆசைக்கு இனங்கதானே செய்துள்ளது.. இதனால் இந்தியாவிற்கு ஆபத்து உருவாக வாய்ப்புள்ளது என அறிந்தும் இலங்கை, மிரட்டல் விடும் அளவிற்கு வளர்வது இந்தியாவின் தொலைநோக்கு பாதுக்காப்பு சொதப்பலையே காட்டுகிறது.. தன கணவனை கொன்றவர்களை பழிவாங்கி விட்டபிறகாவது நாட்டின் மேல் சிறிது அக்கறை கொண்டு ராஜாங்க நடவடிக்கையில் தலை இடாமல் ஒதுங்கி கொள்வது இத்தாலிய மருமகளுக்கும் நமக்கும் நல்லது

sidtharth said...

நம்ம அறிவாளி "சோ" திருவாய் இன்னும் திறக்கலையே?

sidtharth said...

சக்கர வியூகத்துக்கு நடுவே ஒரு 'அபிமன்யு' !

Anonymous said...

நம்ம அறிவாளி "சோ" திருவாய் இன்னும் திறக்கலையே?////

Anonymous said...

ராஜீவ் காந்தி கொல்ல பட்ட போது அவருடன் 15 அப்பாவி தமிழர்கள் கொல்ல பட்டார்கள்.
அதில் கோகிலவாணி என்ற சிறுமியும் அவளது தாயாரும் சேர்த்து கொல்ல பட்டனர். விடுதலை புலி ஆதரவாளர்களே , இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். இவர்கள் கொல்ல பட்ட போது நீங்கள் எங்கே போனீர்கள். உங்களில் பலர் என்ன கருது கூறினீர்கள் என்று நினைவு இருகிறதா ? அவர்கள் ஏன் ராஜீவ் காந்தி மீட்டிங் செல்லவேண்டும் என்று கேள்வி எழுப்புநீர்கள். பத்து வயது கூட நிரம்பாத அந்த அப்பாவி சிறுமி கொல்லப்பட்டது சரி என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் , பிரபாகரன் மகன் கொல்லபட்டதும் சரிதான்.