மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விலைவாசி கடுமையாக அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இதைப் பார்க்கும்போது, நாட்டை நிர்வகிக்க ஒரு அரசு இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. நம் நாட்டில் இதற்கு முன் பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுள்ளது. அப்போதெல்லாம் சரியான எதிர்க்கட்சிகள், வலுவான ஊடகங்கள், போராட்டக்குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் இல்லை. ஆனால், இப்போது நிலைமை அப்படி அல்ல.
இருந்த போதும், தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக நாட்டு நலனை தியாகம் செய்யும் போக்கை காங்கிரஸ் கட்சி இப்போதும் வழக்கமாகக் கொண்டுள்ளது.
கரையான்களை போல நாட்டை சேதப்படுத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. அவற்றை உடனடியாக ஒழித்துவிட முடியாது. ஆனால், அதை ஒழிக்கும் மருந்தாக பாஜக தொண்டர்களின் வியர்வை உள்ளது. வியர்வை சிந்தி உழைத்தால் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மாற்றாக ஒரு அரசை நம்மால் உருவாக்கி வெற்றி பெற முடியும். அதை மனதில் வைத்து, மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.
பிரதமர் வேட்பாளர் யார்? அப்பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்? போன்ற கேள்விகள் இப்போது முக்கியமல்ல.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு ஏற்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அப்பதவிக்கு பொருத்தமானவராக இருந்தார். ஆனால், அப்பதவிக்கு முகர்ஜியை நியமிக்காமல் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
முகர்ஜியை பிரதமராக்கி இருந்தால் அவர் சிறப்பாக செயல்பட்டிருப்பார். இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்னைகளை அவர் தவிர்த்திருப்பார். பிரச்னைகளின் ஆணி வேரை நன்கு புரிந்துகொண்டு, அவற்றுக்கு உரிய தீர்வு காணக்கூடிய தகுதி அவருக்கு உள்ளது.
ஆனால், முகர்ஜியை பிரதமராக்கினால் அவர் சிறப்பாக செயல்பட்டு, அதனால் காந்தி குடும்பத்தின் (சோனியா குடும்பம்) அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என பயந்ததால்தான் அவரை பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் நிறுத்தவில்லை.
அதன் மூலம் வலிமையான தலைமைக்கு காங்கிரஸ் மேலிடம் முன்னுரிமை கொடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, ஆட்சியில் இருப்பதுதான் நாம் தற்போது சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். நாட்டு மக்களுக்கு ஏதாவது நலனை செய்ய வேண்டும் என சிந்திப்பது, காங்கிரஸின் ரத்தத்திலும் குணத்திலும் இல்லாத ஒன்றாகும். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பாஜக கூட்டணி ஆளும் குஜராத், சத்தீஸ்கர், கோவா, மத்தியப் பிரதேசம், பிகார், கர்நாடகம் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியைப் பார்த்து நலத்திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளவேண்டும்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான ஆளுகையால் நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். காங்கிரஸால் இனி மக்கள் மன்றத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
வாஜ்பாய் தலைமையில், பாஜக அரசு நடைபெற்றபோதுதான் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தி உலக நாடுகளை நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
காங்கிரஸ் ஆட்சியில் தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக சோனியா காந்தி உள்ளார். அந்தக் குழுவில் ஐந்து நட்சத்திர கலாசாரத்துடன் வாழ்பவர்கள், மக்களிடம் அறவே தொடர்பு இல்லாதவர்கள்தான் உறுப்பினர்களாக உள்ளனர்.
பாஜகவும், அதன் தேர்தல் சின்னமான தாமரையும்தான் நாட்டை வலுப்படுத்தும் சக்தி பெற்றவை. அதற்கான பங்களிப்பை வழங்குவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று பேசினார் நரேந்திர மோடி.
மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மோடி கூறியதாவது: ""காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்ட வேண்டுமானால், நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் (மிஷன்) கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ கமிஷனை குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறது.
2ஜி, காமன்வெல்த், நிலக்கரி, ஹெலிகாப்டர் என பல்வேறு ஊழல்களில் காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கிடப்பதே இதற்கு சான்று. மிஷனுக்கும், கமிஷனுக்கும் இடையே நடைபெற உள்ள போட்டியில் (மக்களவைத் தேர்தல்) கமிஷனை தோற்கடிக்க வேண்டும்''
ஸ்டார்ட் மியூசிக்


நன்றி: தினமணி










13 Comments:
nachu-nu iruku..welcome Modi..we need a change to change everything.
காமிரா இருந்தா பிஜெபி காசு வாங்கும். காமிரா இல்லைன்னா காங்கிரஸ் காசு வாங்கும். வித்தியாசமே இல்லை
கிட்டத்தட்ட 10 வருஷம் ஆட்சி செஞ்சி காங்கிரஸ் நிறையா சில்லறை பார்த்துட்டாங்க..இனிமே சோனியா குடும்பத்தோட இத்தாலி போயி செட்டில் ஆயிடலாம்.. அவ்வளவு கமிசன் பார்த்தாச்சு.. சிங்குக்கும் கொஞ்சம் குடுத்து வாயையும், நேர்மையையும் அடைச்சிட்டாங்களோ ??
ஆகவே, மகா ஜனங்களே..நல்லா காங்கிரசுக்கே ஒங்க ஓட்டை குத்துங்க எசமான்..குத்துங்க..
மந்திரியாக இருந்த வரை பிரணாப் முகர்ஜியை பி ஜே பி பாராட்டிய மாதிரி தெரியவில்லையே ? - ஜெ.
ரையான் போல? ஓஹோ, 'க' வை கரையான் அரித்துவிட்டதா!
ரையான் போல காங்கிரஸ் - நரேந்திர மோடி???
Ka missing!
கரையானில் "க" மிஸ்ஸிங்.
உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு நிகழ்வு அணு ஆயுத சோதனை.அது நாட்டுப் பற்றால் உந்தப்பட்ட ஒரு இயக்கத்தின் வழித் தோன்றல்களால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு செயல்.நாட்டுப் பற்று என்பது ஒரு அவமான எண்ணம் என்று உரைத்த திராவிட / போலி மதச்-சார்பு மாயை நீங்கி தேசம் ஒளிர்ந்த ஒரு காலம் . மீண்டும் ஒளிர்வோம். மிக அருகில் உள்ளது பொற்காலம்.
இப்போதைய நிலையில் காங்கிரசுக்கு மாற்று என்று முழுமையாகச் சொல்ல யார் இருக்கிறார்கள்?
எந்தக் கட்சியில் யாரைப 'பிரதமர் வேட்பாளர்' என்று சண்டையின்றி அறிவிப்பார்கள்?
//
ரையான் போல? ஓஹோ, 'க' வை கரையான் அரித்துவிட்டதா! //
சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள். டைட்டிலில் காங்கிரஸ் இருப்பதால் 'க' போய்விட்டது :-)
மோடி ஒருவகையில் காங்கிரசுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!
அவர் பிரதமரானால் அதற்கு முழுக்காரணம் காங்கிரஸ்தான். மோடியை வைத்தே கடந்த பத்துவருடமாக அரசியல்பேசி அவரை பிரதமர் வேட்பாளராக்கிவிட்டனர்.
மணி சங்கர் ஐயர் , மோடியை நல்லபாம்பு அல்லது தேள் என்று சொல்லி உள்ளார். நல்ல பாம்பு அல்லது தேள் நாம் தொந்தரவு கொடுக்காதவரை நம்மை எதுவும் செய்யாது. ஆனால் கரையான் நமது உடமைகளை அரித்து விடும்.
Ennathu karnataka kooda valarantha state a solave Illa? Ange BJP Adura Dance than cleara theriyuthe boss:)
Post a Comment