பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 10, 2014

தொட்டால் தொடரும் - கேபிள் சங்கர்


வாழ்த்துகள் நண்பரே !

Read More...

Friday, July 04, 2014

வருத்தமும் மன்னிப்பும்

தேர்தல் சமயத்தில் இட்லிவடை தளத்தில் வலது பக்கத்தில் ‘ஆலந்தூர் இடைத்தேர்தல்லில் ஆம் ஆத்மி வேட்பாளராக ஞாநி’ என்ற செய்தியுடன், ஒரு சினிமா படத்தை போட்டிருந்தோம்.

மூத்த பத்திரிக்கையாளர் ஞாநி மீது இட்லிவடை மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. அவரை இழுவுப்படுத்தும் நோக்குடன் செய்தது அல்ல. ஆனால் பிறர் மனம் வருந்தும் படி செய்துவிட்ட அந்த அந்த படத்தை நீக்கிவிட்டு, அவரிடம் மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
இட்லிவடை

Read More...

Friday, May 16, 2014

மோதிக்கு J !

வாழ்த்துகள் !

Read More...

Wednesday, February 12, 2014

மீண்டும் இட்லிவடை

சில நாளாக இட்லிவடை தளம் வாசகர்களுக்கு(?) தெரியாமல் இருந்தது. ஏதோ மால்வேர் பிரச்சனை ரிவ்யூ செய்வதாக கூகிள் சொன்னது. கடந்த பல வருடங்களாக இட்லிவடை தளத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை ஏன் உருப்படியாக போஸ்ட் கூட போடவில்லை, அதனால் நிச்சயம் தளம் திரும்பி வரும் என்று நம்பினோம். அதே போல முனீஸ்வரர் கருணையால் திரும்ப வந்துவிட்டது.

இட்லிவடை வந்தாச்சு, அடுத்து மோடி தான்!

பிகு: எஸ்.வி.சேகர் பேட்டி முடிந்துவிட்டது... கூடிய விரைவில்.. இட்லிவடையில்..

Read More...

Tuesday, October 29, 2013

இட்லிவடை - பத்தாண்டுக் கலைச் சேவை

இட்லிவடை ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சமயத்தில் இட்லி வடை வாசகர்களுக்கு (இன்னும் இருந்தால்) மிக்க நன்றி.

இந்த வருஷம், அதுவும் கடந்த சில மாதங்களாக கடையைச் சரியாக கவனிக்க முடியவில்லை. வேலை அதிகம் என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. வீட்டில் சமையல் வேலை செய்யும் அம்மணிகள் எல்லாம் அரசியல் ஸ்டேட்டஸ் போடும் போது உனக்கு என்ன கேடு? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

பலர் (அப்படித்தான் சொல்ல வேண்டும்) அரசியல் பற்றியும் இலக்கிய சர்ச்சை பற்றியும் ஏன் அவ்வளவாக இப்ப எல்லாம் பதிவுகள் போடுவதில்லை? ஜெ பற்றி வேண்டாம் அட்லீஸ்ட் கலைஞர் பற்றியாவது ஏதாவது நக்கல் அடிக்கலாமே என்று சாட்டிலும், கமெனண்டிலும் கேட்டுள்ளார்கள்.

சண்டேனா ரெண்டு, மண்டேனா ஒன்று என்று எழுதிக்கொண்டு இருந்த பெரியவர்கள் எல்லாம் பிஸியாகிவிட்டார்கள். அதே போல சரக்கு மாஸ்டரும் பிஸி.. !

வாசகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. இனிமேல் இட்லிவடை அப்டேட் ரெகுலராகத் தொடரும். (பரீட்சையில் மார்க் கம்மியாக வாங்கும் போது அப்பா அம்மாவிடம் சூளுரைப்பது இல்லையா?).

இதற்கு எடுத்துக்காட்டாக ஸைடு பாரில் கை வைத்துள்ளேன்.

வரும் நாட்களில் பல நல்ல கட்டுரைகள் வருமென்று உங்களை போல நானும் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
இட்லிவடை

கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம் - கமல் ஹாசன்.. அதனால்... :-)

Read More...

Thursday, September 26, 2013

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு - முன்வெளியீட்டுத் திட்டம்மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பை நவீன முறையில் அச்சிட்டு ஒன்பது பாகங்களாக வெளியிட ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதும் முடிக்காததும் உங்கள் கையில்தான் உள்ளது.

விலைவாசி உயர்ந்த இன்றைய காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பதிப்பித்தால் மொத்தத் தொகுப்பின் (ஒன்பது பாகங்கள்) விலை ரூ.5000 க்குக் கொடுப்பது சாத்தியம் இல்லை. எனவே குறைந்தது முந்நூறு பேருக்கும் மேல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்தால்தான் எல்லோருக்கும் குறைந்த விலைக்குக் கிடைக்க வழி செய்யலாம்.

இதுவரை நூறு பேருக்கும் மேல் இந்தத் திட்டத்தில் இணைவதாக உறுதியளித்துள்ளார்கள். குறைந்தது முந்நூறு பேராவது முன்வெளியீ்ட்டுத் திட்டத்தில் இணைந்தால்தான் பதிப்பாளர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைபவர்களுக்கு மொத்தத் தொகுப்பின் விலை ரூ.5000. இணையாதவர்களுக்கு இதன் விலை ரூ6000 அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று பதிப்பாளர் கூறியுள்ளார். (குறிப்பு: தபால் செலவு தனி. இதில் அடங்காது). தபால் செலவைப் பின்பு செலுத்திக் கொள்ளலாம். முடிந்தவர்கள் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பதிப்பு புதிதாக நேர்த்தியான முறையில் தட்டச்சு செய்யப்பட்டு வெளிவர இருப்பதால் ஏழு மாதங்களிலிருந்து ஒரு வருடம் காலம் வரை ஆகலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தது முந்நூறு பேர் சேரவில்லை என்றால் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் செல்லாததும் பதிப்பாளரினின் முழு முடிவில் உள்ளது. முன்னெடுத்துச் செல்ல முடியாத பட்சத்தில் அதுவரை பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். மீதித் தொகை வட்டியில்லாமல் திருப்பிக் கொடுக்கப்படும்.

முன்வெளியீட்டுத் திட்டம் விவரம்

மஹாபாரதம் கும்பகோணம் ம.வீ.ரா பதிப்பு

மொத்தம் ஒன்பது பாகங்கள். கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பக்கங்கள். எடை கிட்டத்தட்ட பதினைந்து கிலோ.

முன்வெளியீட்டுத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு விலை ரூ.5000

பணம் செலுத்துபவர்கள் ஒரு முழுத் தொகுப்புக்கு ரூ.5000 கேட்பு வரைவோலையாகவோ (DD) அல்லது காசோலையாகவோ (cheque) "S.Venkataramanan payable at Chennai" என்ற பெயரில் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தும்போது பின்புறம் தங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கண்டிப்பாகக் குறிப்பிடவும். தனியாக கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.

1) பெயர்
2) முழு முகவரி
3) தொலைபேசி எண்
4) மின்னஞ்சல் முகவரி
5) காசோலை அல்லது கேட்பு வரைவோலை எண்
6) வங்கியின் பெயர்
7) தேதி
வங்கிக் கிளையின் பெயர்
9) எத்தனைத் தொகுப்புகள் வேண்டும்
10) மொத்தத் தொகை (ஒரு முழுத் தொகுப்புக்கு ரூ.5000)

பதிப்பாளர் சென்னையில் இருப்பதால் காசோலை செலுத்துபவர்கள் சென்னையில் வங்கிக் கணக்கு உள்ளவர்கள் உள்ளூர் காசோலையை அனுப்பலாம். இல்லை என்றால் சென்னையில் பணம் எடுக்கும்போது பணப்பிடிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் (at par cheque or multi city cheque).

தாங்கள் அனுப்பிய காசோலை அல்லது கேட்பு வரைவோலை கிடைத்தவுடன் பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிப்பாளர் தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைப்பார்.

S. VENKATARAMANAN
NEW NO: 9 – OLD NO:135
NAMALVAR STREET, EAST TAMBARAM
CHENNAI 600 059. INDIA
PHONE NO: 9894661259
EMAIL : venkat.srichakra6@gmail.com

இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பதிப்பாளரின் வங்கிக் கணக்குக்கும் பணம் செலுத்தலாம். வங்கிக் கணக்கின் விவரங்கள் கீழே. செலுத்தியவுடன் தேவையான அனைத்து விவரங்களையும் தபால் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ பதிப்பாளருக்குத் தெரியப்படுத்தவும்.

S.Venkataramanan
Punjab National Bank
S.B.Account No: 3613000400053803
IFSC Code: PUNB0361300
Periamet branch
Chennai

அன்புள்ள
பா.மாரியப்பன்

இதுபற்றி தினகரன் வசந்தம் இதழில் வந்த செய்தி:
http://srimahabharathaparvangal.blogspot.in/2013/09/blog-post_6444.html

விஜயபாரதத்தில் வந்த செய்தி: http://srimahabharathaparvangal.blogspot.in/2013/09/blog-post_5725.html
நல்ல வாய்ப்பு

Read More...

Thursday, August 08, 2013

விஸ்வரூபம் - 2


நாளை FIR :-)

Read More...

Saturday, July 27, 2013

மஹாபாரதம் - கும்பகோணப் பதிப்பு

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போதுஅச்சில் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன.மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவராலேயே சரி பார்ப்பது பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கும்போது இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும்.

விலை ரூ.5000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம்.

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரை பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எப்படிச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள் எனக்கும் மின்னஞ்சல் செய்யலாம். mariappan.balraj@gmail.com

ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். கேள்விகள் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்குமா என்று தெரியாது ஆனால் 5000ரூக்கு மஹாபாரதம் கிடைக்கும் !

Read More...

Friday, April 19, 2013

இன்று ஸ்ரீ ராம நவமி !


ராமநவமி வாழ்த்துகள்

Read More...

Wednesday, March 20, 2013

இட்லிவடை வாசகியின் வேண்டுகோள்

அன்புள்ள இட்லி வடைக்கு,

உங்கள் வாசகர்களின் அனுபவக் கருத்துக்களை எதிர்பார்த்து இட்லிவடை வாசகியின் வேண்டுகோள்.
Environmental engineering, Visual Communication துறைகள் குறித்த தகவல்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் என் மகனுக்குத் தேவைப்படுகிறது.

1. இந்தத் துறையில் சிறப்பாக இருக்கும் சென்னைக் கல்லூரிகள்
2. வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் : தனியார் மற்றும் அரசுத் துறைகள், சுய வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள்
3. மேற்படிப்புக்கான வாய்ப்புகள்

இணையத்தில் சுலபமாகக் கிடைக்கக் கூடிய சில இணைய தளங்களின் குறிப்புகள் அல்லாமல் துறை சார்ந்த அதில் குறைந்தபட்ச அனுபவம் உள்ளவர்களின் கருத்துகள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி
இட்லிவடை வாசகி


Read More...

Saturday, March 09, 2013

பாண்டியின் நன்றி


செந்தூர்பாண்டி பற்றி சில நாள் முன் பதிவு வந்தது நினைவிருக்கலாம். அவருடைய சக்கர நாற்காலியில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அதை சீர் செய்ய கிட்டத்தட்ட ரூ.30000 தேவை என்று சொன்னவுடன்... வாசகர்கள் உடனே முன் வந்து உதவி செய்தார்கள். பதிவு போட்ட இரண்டு நாளில் வேண்டிய பணம் வந்து சேர்ந்து, சக்கர நாற்காலியும் பழுது பார்க்கப்பட்டுவிட்டது!


பாண்டியின் முகத்தில் சிரிப்பும், நன்றியும் இட்லிவடை வாசகர்களின் பங்கு இருக்கிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி வாசகர்களே !

Read More...

Wednesday, March 06, 2013

ரீசார்ஜ் செய்யும் ஆர்ட்!

செந்தூர்பாண்டியின் ஓவியத்திறமை பற்றி எ.அ.பாலா இட்லிவடையில் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். அவரது ஓவியத்திறமையை முன்னிறுத்தி ஒரு பக்க கட்டுரை ஒன்று இந்த வார கல்கியில் வெளிவந்துள்ளது.( தனியாக கீழே கொடுத்திருக்கிறேன் )

பாண்டியின் தானியங்கி சக்கர நாற்காலியில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அதை சீர் செய்ய கிட்டத்தட்ட ரூ.30000 தேவையிருப்பதாகவும், சக்கர நாற்காலி இல்லாத சூழலில் பாண்டி தனது கைத்தொலைபேசி ரிப்பேர் கடைக்கு சென்று வர கஷ்டப்படுவதாகவும் கேள்விப்பட்டேன். 

இட்லிவடை வாசகர்கள் தங்களால் இயன்ற உதவியை பாண்டிக்கு நேரடியாகச் செய்யலாம். மேலும் தகவலுக்கு கீழே உள்ள தொலைப்பேசியை தொடர்பு கொள்ளலாம் அல்லது பாலாவை அனுகலாம்.

நன்றி
இட்லிவடை

M.SENTHUR PANDIAN

NO,5/269 VEERAMAMUNIVAR STREET M.A NAGAR STREEET
REDHILLS CH-52
PHONE NO - 9940512774

அவரது வங்கிக்கணக்கு எண்:

M.SENTHUR PANDIAN
INDIAN BANK ACCOUNT NO -977780556
RED HILLS BRANCH


கல்கியில் வந்த கட்டுரை

ரீசார்ஜ் செய்யும் ஆர்ட்! -  கி.ச.திலீபன்
இரண்டு கால்களும் செயல்படாத, இரண்டு கைகளில் வலதுகை மணிக்கட்டுக்குக் கீழ் மட்டும் செயல்படும் மாற்றுத் திறனாளியான செந்தூரப்பாண்டியன் தமது பல திறமைகள் மூலம் நம்மை அசர வைக்கிறார். சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் வசிக்கும் செந்தூரப்பாண்டியனின் பேச்சு உத்வேகம் மிகுந்தது.
மத்தவங்க மாதிரி என்னால நடக்க முடியலையேன்னு நானும் வருத்தப்பட்டேன். அப்பப்ப என்னை நெனைச்சு நானே அழுததுண்டு. ஏதோ பத்தாம் வகுப்பு வரை ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால அங்க எனக்குக் கிடைச்ச ஊக்கத்தில் என் மனசு தேறிச்சு. பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வந்தப்ப எங்கப்பா என்னை ஏத்துக்க மாட்டேனுட்டார். நான் இப்படியிருக்கிறதால அவருக்கு அது அவமானமாவே இருக்காம். என்னாலேயே எங்கப்பா குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு போயிட்டார். சொந்த அப்பாவே நம்மள வெறுத்த பிறகு வேற எவன் என்ன சொன்னா என்னன்னு அன்னைக்குத்தான் முடிவு பண்ணேன். இருக்கிறதை வெச்சுக்கிட்டு சிறப்புற வாழ்றதுதான் வாழ்க்கை. நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கப் போறேன்னு தெரிஞ்சப்புறம் அழுது மட்டும் என்னாகப் போவுது?
என்னைப் பார்த்தா வாடகைக்கு வீடு கொடுக்கக் கூடத் தயங்குறாங்க. எங்களுக்குன்னு ஒரு சொந்த வீட்டைக் கட்டிக் காட்டணும்ங்கிறதுதான் என் லட்சியம். செல்போன் சர்வீஸ் பண்றது, ரீசார்ஜ் பண்றதுன்னு இப்ப தினமும் 250 ரூபாய் சம்பாதிச்சுட்டு வர்றேன். ஆனா இதைவிடப் பெரிய கடையைப் போட்டு இன்னும் சம்பாதிக்கணும்ங்கிற ஒரு வெறி எனக்குள்ள இருக்கிறதாலதான் என்னால சோர்வே அடையாம வேலை செய்ய முடியுது. என்னை அப்பப்போ ரீசார்ஜ் செய்ய வைக்கிறதும் நம்பிக்கையை டவுன்லோடு பண்ண வைக்கிறதும் இந்த ஓவியங்களை வரையும் போதுதான்" என்கிறார் செந்தூரப்பாண்டியன்.
கலைக்கு எப்போதும் கவலைகளைக் கலைக்கும் தன்மை இருக்கு என்பது செந்தூரப்பாண்டியன் மூலம் நிரூபணமாகிறது.


நன்றி: கல்கி


உதவுங்கள்...

Read More...

Tuesday, February 26, 2013

யார் கண் பட்டதோ ?

கடந்த ஒரு வாரமாக இட்லிவடையில் எந்தப் பதிவும் வரவில்லை.
முதலில் பிளாகர் டெம்பிளேட்டில் ஏதோ மாற்ற ஆரம்பித்து சொதப்பியது...திரும்ப பழைய டெம்பிளேட்டை கொண்டு வரும் சமயம் என் லேப்டாப் படுத்துவிட்டது.

அதை சரி செய்ய இரண்டு நாள் ஆச்சு, மன்மோகன் சிங் குண்டு வெடித்த இடத்தை பார்த்த அன்று, பில் சரியாக கட்டவில்லை என்று இண்டர்நெட்டை புடுங்கிவிட்டார்கள். 

ஒருவாரம் பதிவு ஏதுவும் வாராதது குறித்து வாசகர் யாரும் பெரிதாக கவலைப்படவில்லை :-)

Read More...

Monday, February 18, 2013

கிருபாகரனுக்கு உதவி தேவை - Followup

கிருபாகரனுக்கு உதவி தேவை என்ற பதிவுக்கு இட்லிவடை வாசகர்கள் பலர் உதவ முன்வந்தது குறித்து மகிழ்ச்சி.

பணம் அனுப்பியவர்கள் சரியான தகவல்களை சொல்லவில்லை என்று நினைக்கிறேன். சிலருக்கு எங்கே அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லை.

பணம் அனுப்பியவர்கள் விவரங்களை சரியாக சொல்ல வேண்டும் - எவ்வளவுத்தொகை அனுப்பட்டது என்ற விவரம் கிடைத்தால் தான் அந்நிறுவனத்தார் அந்தத்தொகையை இந்தக்குழந்தையின் செலவிற்காக அளிக்க இயலும். அதனால் பணம் அனுப்பும் அன்பர்கள், அல்லது வேற கேள்விகள் இருந்தால் கிரிஷுக்கு [ sw_griesh@yahoo.com ] ஒரு மெயில் அனுப்பிவிடுங்கள்
நன்றி.

Read More...

Tuesday, January 29, 2013

எச்சரிக்கை

சரக்கு மாஸ்டர் கேட்டுக்கொண்டதால் 'ஃபேஸ் புக்கில்' ஒரு கிளை திறந்திருக்கிறேன்.

 அங்கேயும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அட்ரஸ்: http://www.facebook.com/idly.vadai

Read More...

Friday, December 21, 2012

உலகம் இன்னும் அழியவில்லை


இந்த படத்தில் இருப்பவர் உங்கள் கண்களுக்கு தெரிந்தால் நீங்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் இருப்பதை பின்னுடத்தில் உறுதி செய்யுங்கள்

Read More...

Monday, December 10, 2012

விகடனின் வலைபாயுதே

பத்திரிகையாளர் ஞாநி அவர்களுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கார்.

முக்கியமான அறிவிப்பு இது:

தங்கள் நிறுவன ஊழியர்கள் சமூக தளங்களில் கருத்து சொல்லக் கூடாதென்று ஆனந்த விகடன் குழும நிர்வாகம் அவர்களுக்கு அண்மையில் ஒரு விதியைப் பிறப்பித்திருப்பதாக் அறிகிறேன். அதன் பின்னர் வழக்கமாக இங்கே அதிகம் உலவும் சில விகடன் ஆசிரியர் குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். இந்த விதி தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் அத்து மீறல் என்பதும் இதைப் பிறப்பிக்க விகடன் குழுமத்துக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என்பதே என் கருத்து. தங்கள் இதழில் வெளியாகும் விஷயங்களையே இது பத்திரிகையின் கருத்தல்ல என்று நீதிமனறத்தில் சொல்லி நழுவக்கூடிய பத்திரிகைகள் , தங்கள் ஊழியர்கள் வலை தளங்களில் சொல்லும் கருத்துகள் பத்திரிகையின் கருத்துகள் என்று கருதப்பட்டுவிடும் என்று சாக்கு சொல்வது அபத்தமானது; அநீதியானது. பதுங்கியிருக்கும் அனைத்து விகடன் ஆசிரியர் குழுவினரையும் திரும்ப வந்து வழக்கம் போல இங்கே இயங்கும்படி வேண்டுகிறேன். விகடன் நிர்வாகம் போட்டிருக்கும் விதி நீதிமன்றத்துக்குச் சென்றால் அடிபட்டுவிடும். அதற்கு அஞ்சவேண்டாம்.

ஞாநி சொல்லுவது சரி என்று ஒத்துக்கொண்டாலும், நடைமுறையில் இது சாத்தியம் இல்லை. விகடனில் வேலை பார்ப்பவர்கள் ஒன்றாம் தேதி சம்பளம் வாங்குபவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இருக்கு ஃபீஸ் கட்ட வேண்டும், மின்சாரம் இல்லை என்றாலும் அதற்கு கட்டணம் கட்ட வேண்டும். யார் நீதிமன்றம் போக போகிறார்கள் ? போன வாரம் ராம் ஜெத்மலானி கட்சிக்கு எதிராக பொதுவில் பேச அவரை வெளியே துரத்தினார்கள்.... தனி நபர் கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இருக்கு ஆனால் தங்கள் பத்திரிக்கைக்கு எதிராக அது இருக்க முடியாது என்பது தான் நிதர்சனம்.

விகடனில் ஒரு தலையங்கம் அல்லது விகடன் தயாரிக்கும் ஒரு டிவி சீரியலை பற்றி விகடன் டீமில் இருக்கும் ஒருவர் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் தலையங்கம் தனக்கு உடன்பாடு இல்லை என்றோ சீரியல் மொக்கை என்றோ பொதுவில் எழுதினால் அவருக்கு பல 'லைக்' வரும் ஆனால் விகடன் நிர்வாகம் அவருக்கு 'டிஸ்லைக்' அனுப்பிவிடுவார்கள். லைக் போட்டவர்கள் அவருக்கு சம்பளம் கொடுக்க போவதில்லை.

பத்திரிக்கை ஜாம்பவான்கள் அவர்கள் பத்திரிக்கையில் வேலை செய்தவர்களை எங்காவது பொது நிகழ்ச்சி அல்லது வேறு எதிலாவது எழுத வேண்டும் என்றால் இவர்களிடம் பர்மிஷன் வாங்கிய பிறகே செய்யலாம் என்ற ரூல் இருந்திருக்கிறது. ஏன் தங்கள் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் கூட அவர்களிடம் கேட்க வேண்டியிருந்திருக்கிறது.

விகடன் ஏன் இந்த முடிவை எடுத்தது என்று தெரியவில்லை... ஏதாவது காரணம் இருக்கலாம். தெரிந்தவர்கள் ஆந்தையார், கழுகார் பின்னூட்டத்தில் சொல்லலாம்..

எனக்கு உள்ள ஒரே பயம் இட்லிவடை மாதிரி பொங்கல் வடை, மசால் தோசை, ஆனியன் ரவா என்று இவர்கள் வந்தால் என் பிழைப்பு பாதிக்கப்படும் :-)

அப்டேட்:

ரவி பிரகாஷ் ஞாநிக்கு சொன்ன பதில் இது

அரைகுறையாகத் தெரிந்துகொண்டு இப்படிப் பதிவிட்டிருக்கும் திரு.ஞாநி அவர்களுக்கும், அவருக்கு ஆதரவாக இங்கே கமெண்ட் போட்டிருக்கும் மற்றவர்களுக்கும் இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூக தளங்களில் கருத்து எதுவும் சொல்லக்கூடாதென்று விகடன் குழும நிர்வாகம் தன் ஊழியர்களுக்குக் கட்டளை எதுவும் இடவில்லை. சொல்கிற கருத்துக்கள் தனது சொந்தக் கருத்துக்களே, விகடன் குழுமத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுறச் சொல்லுமாறுதான் உத்தரவு பிறப்பித்துள்ளது. விகடனுக்குச் சொந்தமான புகைப்படங்கள், தகவல்கள் எதையும் தங்கள் தனிப்பட்ட முக நூலில் பகிர வேண்டாம் என்றுதான் அறிவுறுத்தியுள்ளது. தவிர, புரொஃபைலில் விகடன் ஊழியர் என்கிற முகவரியோடு கருத்து பதியும்போது அது விகடனின் கருத்தாகவே பலரால் பார்க்கப்படும் என்பதால் (பலமுறை அப்படியொரு துரதிர்ஷ்டம் எனக்கே நடந்துள்ளது. விகடனின் கருத்து வேறு, அதில் பணிபுரிகிறவர்களின் கருத்து வேறு என்கிற தெளிவு இங்கே பலருக்கு இன்னும் ஏற்படவில்லை. இங்கே கமெண்ட் போட்டிருக்கும் ஏபி ராஜசேகரனின் ஆதங்கமே அதற்கு ஒரு உதாரணம்.) தங்கள் புரொஃபைலில் இருந்து அந்த அடையாளத்தை நீக்கும்படி சொல்லியிருக்கிறது. மற்றபடி கருத்துக்களைப் பகிரவேண்டாம் என்று விகடன் உத்தரவிடவில்லை. எனவே நீங்கள் சொல்லும் அத்துமீறலோ, தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையீடோ ஏதும் நடந்துவிடவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

Read More...

Monday, December 03, 2012

இன்னொரு சிவகாசியகப்போகிறதா திருமங்கலம்?.

இட்லிவடைக்கு வந்த கடிதம்.

மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலத்தில் மிக ஆபத்தான முறையில் வீடுகளுக்கு உபயோகப்படுத்தப் படும் LPG சிலிண்டர்களை கமர்சியல் சிலிண்டர்களில் அடைத்து கொடுக்கும் வேலை நடந்து வருகிறது. அதுவும் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள அரசு ஆண்கள் பள்ளிக்கு மிக அருகில் நடப்பதுதான் வேதனை. தினமும் குறைந்தபட்சம் 50 முதல் 60 சிலிண்டர்கள் வரை வியாபாரம் நடக்கிறது.

அருகில் உள்ள கிராமங்களிலிருந்து 450 முதல் 500 ரூபாய் வரை வாங்கப்படும் சிலிண்டர்கள் மாருதி வேனில் வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. பின்பு அதனை தண்ணீர் இறைக்கப் பயன்படும் பம்ப் உதவியுடன் மிக ஆபத்தான வகையில் கமர்சியல் சிலிண்டர்களுக்கு மாற்றப்படுகிறது. இவை அங்குள்ள கடைகளுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை இலாபம் வைத்து விற்கப்படுகிறது. இவையனைத்தும் எல்லோரும் பார்க்கும் வகையில் வீட்டின் வாசல் பகுதியில் நடப்பதுதான் ஆச்சர்யம். அருகில் இருக்கும் வீடுகளுக்கு இந்த ஆபத்து எதுவும் தெரியவில்லை. ( அதே தெருவில் வசிப்பவர்களுக்கு 50 ரூபாய் அதிகம்). அங்குள்ள IOC முகவர் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விடுவதால் எந்த தடையும் இல்லை.

நான் LPG தொடர்பிலான ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதால் இந்த கொள்ளையின் அபாயம் நன்றாக அறிந்தவன் என்ற முறையில் என்னால் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சிவகாசியில் சமீபத்தில் நடந்த தீ விபத்தை போல பலமடங்கு அதிகம் ஆபத்து உள்ள ஒரு செயல் இங்கு கவனிக்கப்படாமலேயே உள்ளது.

நாளை எதாவது வெடிவிபத்து நடந்த பிறகு அனைவரும் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று புலம்பி என்ன பயன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த அபாயத்தை தடுத்து நிறுத்துவார்களா?.

Read More...

Friday, September 21, 2012

மகாபாரதம் தமிழாக்கிய ம.வீ.ராமானுஜாசாரியார்


அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தபிறகு அச்சேறிய முதல் மொழி தமிழ்தான். கி.பி. 1800க்குப் பிறகு, அச்சிடுதல் குறித்த சட்டங்கள் விரிவாக்கப்பட்டு பரவலாக அச்சிடுதல் நடைபெற ஆரம்பித்தது தமிழகத்தில் அவ்விதம் திருக்குறளிலிருந்து
பற்பல நூல்களும் அச்சுவாகனம் ஏறி உலாவர ஆரம்பித்தன. தமிழ்த் தாத்தா சங்க இலக்கியங்களையும், காப்பியங்களையும் மீட்டுக் கொடுத்த வரலாறு நாம் அறிவோம்.


உ.வே.சா. போன்று தமிழ் இலக்கிய உலகிற்கு எண்ணற்ற சான்றோர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றியுள்ளனர். அவர்களில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மாமேதை தான் ம.வீ. ராமானுஜாசாரியார்.

திருச்சிக்கு அடுத்த மணலூரில் அந்த கிராமத்து முன்சீஃபாக பணியாற்றிய வீராசாமி ஐயங்கார் - கனகம்மாள் தம்பதியருக்கு 1866 ஏப்ரல் 16ஆம் தேதியன்று இரண்டாவது மகனாக இவர் பிறந்தார்.


வளர்ந்து, படித்து, சில காலம் கும்பகோணம் நேட்டிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக பணியாற்றி பின்பு கும்பகோணம் காலேஜில் பணியாற்றினார். கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் இவர் பணியாற்றிய காலத்தில் நேரம் இருக்கும் போது, உ.வே.சா அவர்களைச் சந்தித்து இலக்கியங்களை வாசித்து இன்பம் அடைந்திருந்தார். அப்போது, உ.வே.சா சம்ஸ்க்ருதத்தில் சிறந்த பண்டிதர்கள் பலரை அடிக்கடி சந்திப்பார். அவர்கள் மஹாபாரதத்தில் உள்ள சில சிறந்த, அரிய விஷயங்களைச் சொல்லக்கேட்ட பிறகு, ஐயர் "வில்லிபுத்தூர் ஆழ்வார் ஒப்புயர்வற்ற சிறந்த மகாகவி. அவர் வடமொழி மஹாபாரதத்தில் உள்ள விஷயங்களையெல்லாம் விடாமல் பாடியிருந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும்" என்று பல முறை கூறுவார்.


பின்பு மஹாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்ப்பது குறித்து சிற்சில முயற்சிகள் நடைபெற்றன.


1903-ல் ஆசாரியார் தமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மஹாபாரதத்தைத் தமிழாக்க துணிந்தார். ஆயினும் இந்தப் பெரிய காரியத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து இவர் மனம் கலங்க ஆரம்பித்தார். பிறகு ஒருவாறாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புப் பணியை இவர் செய்து, மஹாபாரதத்தை தமிழில் அச்சிட்டுக் கொடுத்தார். இதற்காக இவர் தமது ஆசிரியர் பணியையும் விட்டு விலகினார்.

ஆரம்பத்தில் இந்தப் பணியினுடைய சிரமங்களை நோக்கி வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் உள்ளிட்ட பெரியவர்கள் சிலர் இதை தனியொரு ஆளாகச் செய்யவேண்டாம் என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆயினும் இவர் கண்ணபிரானது திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்த மலைபோன்ற காரியத்தை எடுத்துக்கொண்டார்.

வனபர்வம் இரண்டாம் பாகத்தில் தாம் இந்த மொழிபெயர்ப்புக்காக மேற்கொண்ட சிரமங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் பல பக்கங்களில் விரித்துரைத்துள்ளார். அதில் ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.


தெரிந்த ஜோதிடர் ஒருவர் இந்த வேலையைப் பற்றி ஒரு சீட்டில் ஆரூடம் எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார். மஹாபாரத பதிப்புப் பணிக்காக ஏற்கனவே பல்வேறு துன்பங்களைத் தாங்கியிருந்த இவர், இந்த ஆரூடச் சீட்டு என்னவிதமான துன்பத்தைத் தரப்போகிறதோ என்று கருதி தாமே அதைப் பிரித்துப் பார்க்காமல் ஒரு உறைக்குள் வைத்து அரக்கு முத்திரையிட்டு பத்திரப்படுத்தி வைத்தார். மஹாபாரத வெளியீடு பூர்த்தியாகிய வேளையில் அந்தச் சீட்டினை எடுத்து படித்துப் பார்த்திருக்கிறார். இதை இவரே இவ்விதம் கூறுகிறார்:


"... அந்தக் காகித உறையைப் பிரித்துப் பார்த்ததில் `பாரதம் தமிழ் செய்யக்கேட்கிறது. வருஷம் மூணு செல்லும். இதில் கவலை அதிகம்' என்று எழுதியிருந்தது. ஆதியில் திவான் பகதூர் ரகுநாதராயர் சி.எஸ்.ஐ. அவர்களும், ஷ்ரீமான் வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் அவர்களும் பல காரணங்காட்டி தடுத்தார்கள். பிறகு என் அம்மானும் தமக்கையாரும் தடுத்தார்கள். ஷ்ரீமான் வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர் அவர்களும் மற்றும் பலரும் இது முற்றுப்பெறாது என்று சொல்லியிருந்தார்கள். அவற்றோடு செட்டியாருடைய ஆரூடமும் சேர்ந்து என் மனத்திற்கு இன்ன கவலையை உண்டாக்கியிருக்குமென்பதை அறிஞர்கள் ஊகிக்க வேண்டும். கோவிந்த செட்டியார் எழுதிக் கொடுத்த ஆரூடத்தை என்னோடு இடைவிடாமல் பழகிக் கொண்டிருப்பவர்களுக்கும் சொல்லாமல் 22 வருஷகாலம் மனத்தில் வைத்துக் கொண்டு இருந்தது சிரமமாகவே இருந்தது."


இந்த மாபெரும் பணிக்காக இவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளியது மட்டுமில்லாமல், இவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணியை துறந்து விட்டு தகப்பனாருக்கு உதவியாக இருந்து வந்தார்.


இந்த மிகப்பெரும் பணியின் பரிமாணத்தை இன்றைய சூழ்நிலையில் நாம் உணருவதற்கு ஆசாரியாரின் கீழ்க்கண்ட வரிகளை நாம் படிக்க வேண்டும்.

"எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரிதும் பெரும் பொருட்செலவினால் நிறைவேறக் கூடியதும் பல வருஷங்களில் நடந்து வந்ததும் ஆகையால் பல கனவான்களுடைய பேருதவி இன்றியமையாததாய் இருந்தது.... சம்பளம் படிச் செலவுகளும், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலாக பலவகைகளிலும் பெருந்தொகை செலவாயிற்று. சுமாராகக் கணக்கு பார்த்ததில் ரூ.1,35,000க்கு மேல் செலவு தெரிகிறது... ஆரம்பச் செலவுகளுக்கும்... அச்சிடுவதற்குமாக ரூ.10,000க்கு மேல் கடன் வாங்க வேண்டிற்று. அதற்கு சுமார் 22 வருஷமாக சாதாரணமான வட்டி என்ன ஆகியிருக்கும் என்பது நான் தெரிவிக்க வேண்டியதில்லை.... என்னுடைய இதர வரும்படிகளாலும் ஈடானது போக பாக்கி ரூ.15,000 என் கைப்பொறுப்போடு இந்த மகாபாரதம் பூர்த்தியாகியிருக்கிறது."


இவருக்குத் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் திருமடங்கள் மிகப் பெரிய உதவிகளை ஆரம்பகாலம் தொட்டுச் செய்து வந்திருக்கின்றன. 1932ல் ஒருவர் ரூ.15,000 கைநட்டம் ஆக வேண்டுமென்றால் அவர் எவ்வளவு பெரிய லட்சிய வெறியோடு இந்த மாபெரும் பணியைச் செய்திருப்பார் என்பது நமக்கு விளங்காமற் போகாது.


ஆசாரியார் வெளியிட்ட பதிப்புகள் யாவும் தீர்ந்துபோன பின் கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் 1945-1959 காலகட்டத்தில் மீள்பதிப்புச் செய்தார். அந்தப் பிரதிகளும் இப்பொழுது கிடைப்பதில்லை.

சிவராமகிருஷ்ண ஐயரின் பேரன். எஸ். வெங்கட் ரமணன் (ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ்) இந்த மாபெரும் பணியை இப்பொழுது நிறைவேற்றியிருக்கின்றார்கள்.

அடக்கத்தின் மறு உருவமான ரமணனிடம் இது குறித்து நாம் கேட்ட பொழுது, "ஆசாரியார் 25 வருஷம் உழைத்தார், நிறைய நஷ்டப்பட்டார். அவருக்குப் பின்பு எனது தாத்தா செய்த பணியை நான் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கம் தான் என்னை இந்த மாபெரும் பணியில் ஈடுபட வைத்தது. 2000த்தில் இதற்கான பணியை ஆரம்பித்தேன்.


முதல் பிரதியை காஞ்சி ஷ்ரீஜெயேந்திரர் வெளியிட்டார். 2004 வரையிலும் முதல் நான்கு பாகங்களை வெளியிட்டேன். பின்பு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களினால் 2007-2008ல் தான் மீதி ஐந்து பாகங்களை என்னால் வெளியிட முடிந்தது.


இந்த மஹாபாரதப் பதிப்பு பூர்த்தியான பிறகு பண்டித சா.ம. நடேச சாஸ்திரிகள் சம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 6 வால்யூம்களாக வெளியிட்ட ராமாயணம், ஆசாரியார் மாப்பிள்ளை எஸ். ராமானுஜாசாரியார் மொழிபெயர்த்த ஹரி வம்சம், வைத்தியநாத தீட்சிதரின் வைத்தியநாத தீட்சிதீயம் என்ற தர்ம சாஸ்திர நூல், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சங்கரர், பராசரபட்டர் ஆகியோரின் பாஷ்யங்களை ஆசாரியார் தமிழில் மொழி பெயர்த்த நூல் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று எண்ணி இருக்கின்றோம். ஹிந்து சமுதாயமும் சான்றோர்களும் எங்களுக்குத் துணை நின்றால், இந்தப் பணி விரைவில் நிறைவேறும்" என்று கூறினார்.


ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதப் பதிப்புப் பணியில் பட்ட அதே கஷ்டங்களை, இப்பொழுது வெங்கட் ரமணனும் எதிர்கொண்டு வருகிறார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பது இதுதானோ என்னவோ?

100 வருடங்களாக நாம் மாறாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய டி.என். ராமச்சந்திரனின் கீழ்க்கண்ட கூர்மையான வார்த்தைகள் நிரூபிக்கின்றன.

"நம் அன்பர் தம் கடமையைச் செய்து விட்டார். நாம் நம் கடமையைக் கைகழுவி விட்டோம். சனாதன தர்ம சனாதனிகள் என்று கூறி வருவோர் உரிய கழுவாய் தேடிக் கொள்வார்களாக."


( 2008 அக்டோபர் விஜயபாரதம் இதழில் வெளியானது )


வெங்கட ரமணனை தொடர்பு கொள்ள  - ++91 9894661259.

9/135 Nammalwar street, East tambaram, chennai.

மகாபாரதத்தின்  புத்தகங்களின் விலை -  Rs 4500. இன்னும் சில பதிப்புகளே உள்ளன. அதுவும் சில பர்வங்கள் ஸ்டாக் இல்லாமலும் இருக்கலாம்.

நான் விசாரித்த போது, பப்ளிஷ் செய்ய பெரிய மூலதனம் வேண்டும் என்றும், விரும்புபவர் எண்ணிக்கை பொறுத்தே மீண்டும் பதிப்பிக்க போவதாகவும் சொன்னார்..  

அப்டேட் :
வடமொழியில் ஸ்ரீ வேத வியாசரால் அருளிச்செய்த ஸ்ரீ மகாபாரதத்திற்கு சரியான தமிழ் ஆக்கம்

கும்பகோணம் காலேஜ்  லேட் சமஸ்க்ருத பண்டிதர் மகாவித்வான் சதாவதானம் ஸ்ரீ  உ-பய-வே தி.ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் ,
கும்பகோணம்  அத்வைதசபா பண்டிதர்கள்,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ வேதாந்தகேசரி மஹாமஹோபாத்யாய  பைங்காடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் ,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ கருங்குளம் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரிகள் , ஸ்ரீ வேங்கடாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு,

கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமை தமிழ்ப்பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய  ,
 மணலூர் வீரவல்லி இராமனுஜாச்சரியாரால் தொகுக்கப்பட்டு

கும்பகோணம் ஸ்ரீ மகாபாரதம் பிரஸ்ஸில் லேட் சிவராமகிருஷ்ணய்யரால் அச்சிட்டு உரிமை பெறப்பட்டு வெளிவந்ததின் மறுபதிப்பு .
                                     ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன்ஸ் -  சென்னை


Name of the publisher : S.Venkataramanan (Grandson of Kumbakonam Late S.Sivaramakrishnaiyer)
Sri Chakra Publications.
9/135 Nammalwar street, East tambaram, Chennai.
Ph: +91 9894661259 

Read More...

Monday, July 23, 2012

மண்டே மர்மங்கள் (5.1)

இந்த வாரம் சங்கர் மண்டே மர்மங்கள் அனுப்பவில்லை. ஏன் அனுப்பவில்லை என்பது தான் இந்த வார மர்மம் :-)

அடுத்த வாரம் தொடருமா என்பது இன்னொரு மர்மம் !

Read More...