பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 18, 2014

ஐ பாடல்கள்

ஐ பாடல்கள் முதல் முறை கேட்ட போது சுமாராக இருந்தது. பிறகு கேட்க கேட்க நன்றாக இருக்கும் என்று யாரோ சொன்னதை கேட்டு திரும்ப இரண்டு முறை கேட்டேன். சில பாடல்கள் பரவாயில்லை ரகம். நல்லா இருக்கு என்று சொல்லுவதற்கு இன்னும் இரண்டு நாள் கேட்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பாடலில் ஸ்ட்ராப்பெர்ரி கண்ணே பாடலின் சாயலை கேட்க முடிகிறது.
இப்போதைக்கு மெரசலாயிட்டேன் நன்றாக இருக்கிறது.

அப்பறம் ஆல்பத்தில் வைரமுத்து இல்லை!

Read More...

Thursday, August 05, 2010

மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB


திரு இட்லி வடை வலைத்தளதின் உரிமையாளரே.. தங்களுக்கு ஒரு வின்னப்பம்...
கீழ் இணைத்துள்ள வரவேற்பு மடல் பாடும் நிலா திரு.S.P.பாலசுப்பிரமணியத்திற்காக மதுரை ரசிகர்கள் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் அவர் பாடிய பாடல்களின் பாடல் வரிகளும் அம்ற்றூ அந்த பாடல் பதிவின் போது நடந்த சுவையான சம்பவங்களும் பதியப்பட்டு வருகின்றன..
ஒவ்வொரு பாடலுக்கும் அதை பதிவிறக்கம் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது..
வோட்டிக் போல் (Votting Poll) போன்ற பொழுதுபோக்கும் உள்ளது..
கீழ் உள்ள வரவேற்பு மடலை படித்து பார்த்த பின்னர் என்னுடைய வலைத்தளத்தின் முகவரியை ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB” என்ற லிங்குடன்(Link) தங்களது வலைத்தளத்தில் இணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB

இசை உலகின் பாடும் நிலா, வானம் பாடி என்ற பட்டத்துக்கு உண்மையான சொந்தக்காரர் திரு.பத்மஸ்ரீ S.P.பாலசுப்பிரமணியம். இசையை அறியாதவர் எவரும் இவ்வுலகில் இருக்க முடியாது, அப்படியே இருந்தாலும் கூட இசைநாயகனாம் பத்மஸ்ரீ Dr.SPB-யை தெரியாதவர்கள் இப்பூவுலகில் எவரும் இருக்க முடியாது.

அவரின் சாதனைகளை பட்டியலிட எனக்கு வயது போதாது. நான்கு தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கச் செய்யும் அளவிற்கு அவரது பாடல்கள் வந்துவிட்டன. அப்படியென்றால் அவர் இப்பொழுது பாடும் பாடல்களும் இன்னும் பாடப்போகும் பாடல்களும் எந்தத் தலைமுறைக்குச் சொந்தம் ? விடையை தேடிக் கொண்டிருக்கின்றேன். விடை கிடைக்காமலும், இன்னும் பல பாடல்கள் திரு.பாலுவின் குரலிலிருந்து வரவும் இறைவனை வேண்டுகிறேன்.

பாட்டுடைத் தலைவனாம் பத்மஸ்ரீ Dr.SPB அவர்களின் புகழை எடுத்துச் சொல்லவும், அவரது குரலிலிருந்து வெளி வந்த பாடலின் வரிகளை, வாழும் மற்றும் வர இருக்கும் தலைமுறைக்கும் பரப்ப ஒரு வலைத்தளத்தை (WebSite) நான் உருவாக்கி இருக்கின்றேன்.

பாலுஜியின் இந்த ரசிகர் தளத்திற்கு என் பிறந்த இடமான அந்த தெய்வ நாயகி மீனாக்ஷி குடி கொண்டிருக்கும் மதுரை மண்ணின் பாடும் நிலாவாக நம் இசை நாயகனை வைத்து இந்த வலைத்தளத்திற்கு ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB”

என்று பெயர் சூட்டி தொடங்கி உள்ளோம்.

வலைத்தளத்தின் முகவரி http://maduraispb.blogspot.com/

வலைத்தளத்தின் சிறப்பம்சங்கள்..

Ø பாடலின் வரிகளை நேயர்கள் தமிழ் வார்த்தைகளில் காணலாம்.

Ø பாடல் பதிவின் போது நடந்த சுவாரஷ்யமான நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

Ø பாலுஜி பாடிய அணைத்துப் பாடல்களையும் இங்கு கேட்கலாம்.

Ø பாடலை பதிவிறக்கம் (Download) செய்யும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது.

Ø நேயர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும்,

Ø மிக சுவாரஷ்யமான ஓட்டுப் பதிவும் இங்கு உள்ளது.

இம் மதுரையின் பாடும் நிலா தளத்திற்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் அணைவரும் வருக வருக என்று ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB” குழுவின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வலைத்தளத்தில் தங்களை பின்னூட்டத்தில் (Followers List) இணத்துக்கொண்டு, ஒவ்வொரு பாடலிற்கும் தங்களது கருத்துகளை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும், பாடலின் தகவல்களில் ஏதேனும் பிழையோ அல்லது மாற்றமோ இருந்தால் உடனே தெரிவிக்கவும் குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB”
குழு உறுப்பினர்கள்.


Read More...